News October 20, 2025

நெல்லை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 20, 2025

திருநெல்வேலிக்கு மஞ்சள் எச்சரிக்கை

image

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது‌. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2025

நெல்லை: தீபாவளி பண்டிகை சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கபட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைகள், கவனிப்பு அளிப்பதற்கு ஏதுவாக 20 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் உள்ளிட்ட நவீன உயிர் காக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

News October 20, 2025

நெல்லை: திருச்செந்தூர் ரயில் 2 நாள் பகுதி தூரம் ரத்து

image

நெல்லை ரயில் நிலைய யார்டில் இந்த வாரம் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் அக்டோபர் 22, 23ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சியோடு நிறுத்தப்படும். மறு மார்க்கமாக அதே நாளில் அந்த ரயில் வாஞ்சி மணவாசியில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!