News January 2, 2026
நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 3, 2026
நெல்லை போலீஸ் அதிரடி அறிவிப்பு

‘திருநெல்வேலி மாநகர பகுதிகளில், இன்று (ஜன.3) அதிகாலை முதல் 15 தினங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டஙகள், மறியல்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவை நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் N.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அமைதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
நெல்லை: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

திருநெல்வேலி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

முக்கூடல் அருகே தாளாளர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெனிஸ்குமார் (55). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தோட்டத்தில் உள்ள அறையில் பல்பை பொருத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


