News December 27, 2025

நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 28, 2025

நெல்லை அருகே இளைஞர் தற்கொலை!

image

நெல்லை டவுன் கருப்பன் துறையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வகுமார் (27). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார் உடலை கைப்பற்றி குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுத்தாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2025

நெல்லை: இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

நெல்லை: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

image

மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள காவல் கிணறு என்ற இடத்திற்கு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது வள்ளியூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முஜாஹித் (22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த ரிஸ்வான் படுகாயத்துடன் பாளை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!