News September 4, 2025

நெல்லை பெண்கள் விமானப்படையில் பங்கேற்கலாம்

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவித்ததாவது தாம்பரத்தில் செப். 5 அன்று நடைபெறும் இந்திய விமானப்படையின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் 21 வயதுக்குள் திருமணமாகாத பெண்கள் பங்கேற்கலாம். 1.1.2005 முதல் 7.1.2008 வரை பிறந்தவர்கள், +2 அல்லது 3 ஆண்டு டிப்ளோமா, 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50% மதிப்பெண் பெற்றவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 7, 2025

108 ஆம்புலன்ஸ் பணிக்கு பெண் பைலட் தேர்வு

image

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளத்தில் இன்று நடந்த 108 பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு நேர்காணல் முகாமில் மேல புது குடியைச் சேர்ந்த விசுவாச மேரி என்பவர் 108 ஆம்புலன்ஸ் (ஓட்டுநர்) பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம் ஏ ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஹெவி வெஹிக்கில் லைசென்ஸ் எடுத்துள்ளார். தமிழகத்தின் 3வது 108 ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுநராக பயிற்சிக்கு பின் பணி செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2025

நெல்லை மக்களே; இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

image

முழு சந்திர கிரகணம் (செப்.7) தோன்றும் நிலையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை இரவு 8.50 மணி முதல் அதிகாலை 2:25 மணி வரை சந்திர கிரகணத்தை நேரில் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீன டெலஸ்கோப் பதவியுடன் துல்லியமாக பார்க்க முடியும். இதற்கான நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம் என அறிவியல் மைய அதிகாரி குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News September 6, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!