News June 17, 2024

நெல்லை: பாதி விலையில் உர விதைகள் வழங்க ஏற்பாடு

image

நெல்லை வேளாண் இணை இயக்குநர் முருகானந்தம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் நெல்லை விவசாயிகளிடம் பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள், உழவர் செயலி, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

Similar News

News September 14, 2025

அடிக்கடி கவிழும் அரசு பஸ்கள்: தொழிலாளர்கள் கோரிக்கை

image

நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு அரசு பஸ்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வப்போது விபத்தில், சிக்குவது பிரேக் டவுன் ஆவது போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் போதிய ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிக்க வேண்டும், பிஎஸ் 6 தொழில்நுட்ப பஸ்களை பராமரிப்பு செய்வதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களை பணிகளில் நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News September 14, 2025

நெல்லை முக்கிய ரயில் கோவையில் நிற்காது

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில்
(எண்: 22620) இன்று மட்டும் கோவையில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாடனூர், இருகூர் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படுகிறது. கோவைக்கு பதிலாக பாடனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

நெல்லை மக்களே; ரூ.81,000 வரை சம்பளம்!

image

நெல்லை மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!