News December 14, 2024

நெல்லை பஸ் ஸ்டாண்டில் மழை நீரை தடுக்க நிதி ஒதுக்கீடு

image

நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று (டிச.14) கூறியதாவது; நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பெரியார் சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக வெள்ள நீரை தடுப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Similar News

News March 10, 2026

திருநெல்வேலி: முக்கிய எண்களை SAVE பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

திசையன்விளை- 9384094224

சேரன்மகாதேவி- 9384094223

மானூா்- 9384094222

இராதாபுரம்- 9445000674

நாங்குநேரி- 9445000673

அம்பாசமுத்திரம்- 9445000672

பாளையங்கோட்டை- 9445000669

திருநெல்வேலி- 9445000671

இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News March 10, 2026

யானைகள் நடமாட்டம்; களக்காடு தலையணையில் குளிக்க தடை

image

களக்காடு புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று (10.03.2026) முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் தலையணையை பார்வையிடவும் தடை விதிக்கப்படுகிறது.

News March 10, 2026

திருநெல்வேலி: வாளை கொண்டு போலீசாருக்கு மிரட்டல்

image

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி(30) கீழநத்தம் பகுதியில் வாளை காட்டி பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரையும் வாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டியை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!