News January 20, 2026
நெல்லை: பள்ளி வளாகத்தில் நடந்த திருட்டு

திசையன்விளை அருகே சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் கணேசன்(41), திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாளராக பணியாற்றுகிறார். பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
மாநகர பகுதிகளில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர காவல்துறை, இன்று {ஜனவரி.21} இரவு ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயரை, அறிவித்துள்ளது. அதன்படி, டவுண் பகுதியில் மனோகரன், பேட்டையில் மாசானமுத்து, சந்திப்பில் நடராஜன், பாளையில் முருகன், மருத்துவக் கல்லூரி பகுதியில் கோபால கிருஷ்ணன், மேலப்பாளையத்தில் கணேசன், பெருமாள்புரத்தில் செந்தில்குமார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.
News January 21, 2026
நெல்லை: தலைமறைவான கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி மாநகர காவல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொலை வழக்கில், தொடர்புடைய திருநெல்வேலி பெருமாள்புரம் சுகுமார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றத்தால் ‘பிடி வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி சுகுமாரை இன்று {ஜனவரி.21} பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
News January 21, 2026
நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.


