News March 27, 2025
நெல்லை: நோய் தீர்க்கும் ஆலயம்

நெல்லை, உவரியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது. எந்த நோயாக இருந்தாலும் 41 நாள் கடலில் நீராடி வேண்டினால் நோய் தீரும் என்பது ஐதீகம். கல்யாணவரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இங்கு வேண்டினால் உடனே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணவும்*
Similar News
News August 26, 2025
நெல்லையப்பர் கோவில் வழக்கு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

தூத்துக்குடி பாலசுப்ரமணியன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். நெல்லையப்பர் கோவிலின் மர மண்டபத்தில் உள்ள கடைகள் கோவிலின் பழமையான கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் எனவும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து உதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடைகளை அகற்றவும், கோவிலை நினைவுச்சின்னமாக அறிவிக்கவும் கோரினார். நீதிபதிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
News August 26, 2025
நெல்லை விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரில் இருந்து இன்று இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) நாளை காலை 10 .50 மணிக்கு நெல்லை வரும் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 .40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 50 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நடைபெறுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News August 26, 2025
நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

நெல்லை மக்களே; தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.