News September 24, 2025
நெல்லை: நெட்டீசன்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
கல்லிடைக்குறிச்சி வழியாக இன்று முதல் சென்னைக்கு ஏசி ரயில்

நெல்லை , கல்லிடைக்குறிச்சி, அம்பை வழியாக செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் சிறப்பு ஏசி ரயில் இயக்கபடுகின்றன. சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் முதல்முறையாக அனைத்து பெட்டிகளும் முழு குளிர்சாதன வசதி பெட்டிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
நெல்லை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

நெல்லை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 24, 2025
நெல்லை: டிகிரி இருக்கா? இந்தியன் வங்கி வேலை ரெடி!

நெல்லை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <