News October 8, 2025
நெல்லை: நீதிபதி மீது காலணி வீசியவர் மீது வழக்கு

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில், திருட்டு வழக்கில் கைதான மத்தியபிரதேசத்தை சேர்ந்த திரேந்தர் சிங் (29), நீதிபதி அருண்சங்கரை நோக்கி காலணி வீசினார். காலணி நீதிபதியின் கணினியில் பட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் அவரைப் பிடித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, திரேந்தரை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து அவர் மீது போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 8, 2025
நெல்லை: + 2 மாணவர் மீது தாக்குதல்

திசையன்விளை அருகே தெற்கு ஏராந்தையை சேர்ந்த பொன் பிரதீப் (17) மீது, நாகராஜ் (19) மற்றும் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளின் அதிக ஒலிக்காக கண்டிக்கபட்டதால் ஆத்திரமடைந்த நாகராஜ் இந்த தாக்குதலை நடத்தினார். காயமடைந்த பொன் பிரதீப் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திசையன்விளை போலீசார் நாகராஜ் உட்பட 4 பேரை கைது செய்து, 5 பேரை தேடி வருகின்றனர்.
News October 8, 2025
நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
News October 8, 2025
நெல்லையில் பெட்ரோல் பங்க் சூறை

சேரன்மகாதேவி ஆர்.சி. நடுநிலைப் பள்ளி அருகில் கடையத்தை சேர்ந்த சைத்அலி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், நேற்று முன்தின இரவு, அடையாளம் தெரியாத இருவர் டூவீலரில் வந்து, ஊழியர்களை மிரட்டி பைக்க்கு இலவச பெட்ரோல் கேட்டனர். மறுத்ததால், அரிவாளால் பங்கை சூறையாடி தப்பினர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.