News October 8, 2025

நெல்லை: நாளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சபாநாயகர்

image

நெல்லை மாவட்ட பகுதிகளான உவரி, உறுமன்குளம், கரைச்சுத்தி புதூர், கூந்தன் குழி, இராமநாதபுரம், திருவம்பல‌புரம் ஆகிய பகுதிகளில் பல்வேறு அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் நாளை (அக்.9) காலை முதல் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Similar News

News October 8, 2025

நெல்லை: NLCயில் 1,101 காலியிடங்கள்! உடனே APPLY

image

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 8, 2025

நெல்லை: நீதிபதி மீது காலணி வீசியவர் மீது வழக்கு

image

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில், திருட்டு வழக்கில் கைதான மத்தியபிரதேசத்தை சேர்ந்த திரேந்தர் சிங் (29), நீதிபதி அருண்சங்கரை நோக்கி காலணி வீசினார். காலணி நீதிபதியின் கணினியில் பட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் அவரைப் பிடித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, திரேந்தரை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து அவர் மீது போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

News October 8, 2025

நெல்லை: + 2 மாணவர் மீது தாக்குதல்

image

திசையன்விளை அருகே தெற்கு ஏராந்தையை சேர்ந்த பொன் பிரதீப் (17) மீது, நாகராஜ் (19) மற்றும் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளின் அதிக ஒலிக்காக கண்டிக்கபட்டதால் ஆத்திரமடைந்த நாகராஜ் இந்த தாக்குதலை நடத்தினார். காயமடைந்த பொன் பிரதீப் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திசையன்விளை போலீசார் நாகராஜ் உட்பட 4 பேரை கைது செய்து, 5 பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!