News May 15, 2024
நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 25, 2025
நெல்லை: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

நெல்லை, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <
News December 25, 2025
நெல்லை: புத்தாண்டு சிறப்பு ரயில்கள் விவரம்

தெற்கு ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்: ஈரோடு – நாகர்கோவில் (06025) டிச.30 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுதினம் 1.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கம் (06026) டிச.31 இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். சென்னை வழி நிறுத்தங்கள் உண்டு. (2 ஏசி, 9 சேர் கார், 5 பொது பெட்டிகள். சென்னை செல்லும் பயணிகள் அதிக முன்பதிவு) *ஷேர் பண்ணுங்க
News December 25, 2025
நெல்லை மாவட்ட கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு!

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 01.11.2025-க்கு பிறகு பயணித்த 550 பேருக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியம் ECS முறையில் வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலோ அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.


