News January 19, 2026
நெல்லை: நாய் குறுக்கே பாய்ந்ததால் ஒருவர் பலி!

கீழகோவிலான்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவலைக்காரன் குளம் அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
நெல்லை: மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

திசையன்விளை அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரி (79). இவருக்கு சுந்தரலிங்கம் (49) என்ற மகன் உள்ளார். சுந்தரலிங்கத்திற்கு திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வருத்ததில் இருந்த கல்யாணசுந்தரி நேற்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 26, 2026
நெல்லை: கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம்

மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவருடைய மனைவி பக்கியத்தாய் (23). இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மதியம் 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பத்தாக தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த மானூர் போலீசார் உடலை கைப்பற்றி பாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
நெல்லை: 10th போதும்., ரிசர்வ் வங்கியில் ரூ.46,029 சம்பளம்

நெல்லை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 Office Attendant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 25 வயதுகுட்பட்ட 10ம் வகுப்பு படித்தவர்கள் பிப். 4க்குள் இங்கு <


