News December 15, 2025

நெல்லை: தொழிலாளிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

image

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் அவரது உறவினர் முருகன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே வெங்கடேசை 4 பேர் கும்பல் வெட்டி சாய்த்தது. படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பேட்டை போலீசார் வழக்கு பதிந்து முருகன் (19) என்பவரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

நெல்லை: பெண் போலீஸ் மீது தாக்குதல்.. மாமியார் கைது

image

தச்சநல்லுார் போலீசில் சிறப்பு எஸ்.ஐயாக இருப்பவர் முருகானந்தம். இவரது மனைவி சந்தா. இவர்களது மகன் ஹபீஸ் (28) என்பவரும், பெண் போலீசும் காதல் திருமணம் செய்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக திருச்சியில் இருந்த பெண் போலீஸ், அண்மையில் பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சாந்தா, பெண் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் சந்தா கைது செய்யப்பட்டார்.

News December 19, 2025

நெல்லை: இணையத்தில் தீயாய் பரவும் செய்தி.. நம்பாதீங்க!

image

வாட்ஸ் ஆப் மற்றும் அரட்டை தளங்களில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு முடிவடைய உள்ளதால் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க லிங்கை தொடர்ந்து பதிவு செய்யவும் என்று செய்தி பரவி வருகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களது புகைப்படங்கள் கைப்பேசியில் உள்ள மற்ற தரவுகளைத் திருட வாய்ப்புள்ளதாகவும் அதனை வைத்து உங்களை மிரட்டவும் செய்வார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. SHARE

News December 19, 2025

தூத்துக்குடியில் விரைவில் இஎஸ் ஐ ஆஸ்பத்திரி

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல இஎஸ். ஐ. சி துணை மண்டல அலுவலகத்தின் பொறுப்பு இணை இயக்குனர் பாஸ்கர் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் அமையவிருக்கும் 100 படுக்கைகள் கொண்ட புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து, விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார்.

error: Content is protected !!