News March 27, 2024

நெல்லை தொகுதியில் 49 மனுக்கள் தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் கடைசி நாளான இன்று 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் முதல் கடைசி நாளான இன்று வரை மொத்தம் 49 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி வேட்பாளர்கள் மற்றும் டம்மி வேட்பாளர்கள் உட்பட 49 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் (மார்ச் 27) இன்று தெரிவித்தார்.

Similar News

News February 8, 2026

நெல்லை: போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வேலை ரெடி! தேர்வு இல்லை

image

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 8, 2026

நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நெல்லை மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சுரேந்திரன்(20). தொழிலாளியான இவரை நேற்று இரவு ஒரு கும்பல் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கல்லால் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் முகத்தில் படுகாயமடைந்த சுரேந்திரன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!