News December 28, 2025

நெல்லை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

Similar News

News December 28, 2025

நெல்லை: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

image

மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள காவல் கிணறு என்ற இடத்திற்கு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது வள்ளியூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முஜாஹித் (22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த ரிஸ்வான் படுகாயத்துடன் பாளை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News December 28, 2025

நெல்லையில் பயங்கரம்., தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை!

image

விக்கிரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் மைக்செட் அமைத்துக்கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார். இவர் நேற்றிரவு அதே பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவலறிந்து வந்த அம்பை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2025

நெல்லையில் குவிக்கப்படும் போலீஸார்!

image

ஜன. 1ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. நெல்லை மாநகர் பாளை, முருகன் குறிச்சி, டவுன், தச்சநல்ல்லூர் உள்ளிட்ட பகுதியில் தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். அன்றைய தினம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மாநகரில் 500 போலீசாரும், மாவட்டத்தில்1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!