News October 12, 2025
நெல்லை: துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மயில் சடலம்

நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து மகேஷ் என்பவர் தெரிவித்த தகவலின் படி பணகுடி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கே வீட்டின் பக்கவாட்டுக்கு சுவரிலும் குண்டு பாய்ந்த தடம் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 12, 2025
நெல்லை: இதை செய்ய தவறினால் PAN கார்டு செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News October 12, 2025
ஈரக்கைகளால் ஆபத்து – மின்வாரியம் எச்சரிக்கை

மழைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தினமும் ஒரு விழிப்புணர்வு வாசகத்தை மின் நுகர்வோர், பொதுமக்களுக்கு வெளியிட்டு வருகிறது. இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஈரக்கையால் ஒருபோதும் மின் சாதனங்களை கையாளக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே கைகளில் ஈரம் இன்றி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 12, 2025
நெல்லை: வங்கி வேலை – டிகிரி போதும்! APPLY NOW

நெல்லை மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <