News November 23, 2025
நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News January 25, 2026
நெல்லை: ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் அமீர் சுகைல் (24), ரத்தினபாலன் (38), திண்டுக்கல், பள்ளபட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது (26), முஸ்ஸமில் முர்சித் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து 5 பேரை சிறையில் அடைத்தனர்
News January 25, 2026
நெல்லை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 25, 2026
அம்ரித் பாரத் ரயிலுக்கான கட்டணங்கள் அறிவிப்பு

வள்ளியூர் திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் வாராந்திர சேவையாக இயக்கப்படுகிறது. இதன் முதல் ரயில் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயிலுக்கு நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் 420 ரூபாய், பொதுப்பெட்டியில் பயணிக்க கட்டணம் 240 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.


