News October 4, 2025
நெல்லை: தாயுமானவர் திட்டம் விநியோக தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் வருகிற 5 மற்றும் 6ம் தேதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று குடிமை பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News October 4, 2025
BREAKING: நெல்லை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாநகர வியாபாரிகள் சங்கம் அக்டோபர் 7ம் தேதி கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையிலும் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே என தெரிவிக்கபட்டுள்ளது.
News October 4, 2025
நெல்லை: 6ம் தேதி பி எஃப் அலுவலக மேளா

மாணவர்கள், தொழில்துறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெல்லையில் “பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கர் யோஜனா மேளா” வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. வண்ணார்பேட்டை fx பொறியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை மேற்கொள்ளலாம் என பிஎஃப் மண்டல ஆணையர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்
News October 4, 2025
நெல்லை: குழந்தைகளின் ஆதார் APPLYக்கு ஈஸி வழி!

தென்காசி மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்கு <