News November 5, 2025
நெல்லை: தலைமை செயலகத்தில் வேலை..இன்றே கடைசி

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News November 5, 2025
பாளை: 21 நாட்களுக்குப் பின் உடல் ஒப்படைப்பு

காசி தர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (30). கூலித் தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறைக் கழிவறையில் கடந்த 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தையில் 21 தினங்களுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
News November 5, 2025
நெல்லை: பேருந்து மீது லாரி மோதி விபத்து

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ நுழைவு வாயில் அருகே நான்கு வழிச்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் காயமடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து அணுகுசாலையில் மாற்றி விடப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம்

நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சங்கீதா சின்னராணி பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


