News June 22, 2024
நெல்லை: தந்தைக்கு உதவிய மகன்!

நெல்லையப்பர் கோயிலில் நேற்று(ஜூன் 21) ஆனி தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டம் ஆரம்பித்தபோதே வடங்கள் அறுந்து விழுந்து அதிர்ச்சி தந்தாலும், இரும்பு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு, மக்களும் கை கோர்த்து தேரை இழுத்து சென்றனர். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து வடம் வரவழைக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை, தந்தைக்கு உதவிய மகன் என மக்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
Similar News
News August 30, 2025
பல்கலை வகுப்புகள் செப்.1 முதல் துவக்கம்; துணை வேந்தர் தகவல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதல் விவகாரத்தால் நேற்று முதல் பல்கலைக்கழகத்திற்கு கால வரையற்ற விடுமுறை வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்.1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் வழக்கமாக செயல்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் இன்று அறிவித்துள்ளார்.
News August 30, 2025
மாவட்ட சுகாதார அலுவலர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலராக டாக்டர் கீதாராணி பணி செய்து வந்த நிலையில் அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடத்திற்கு பொறுப்பு சுகாதார அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதிய சுகாதார அலுவலராக விஜயசங்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.அவர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுகாதார அலுவலருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
News August 30, 2025
திருநெல்வேலி: உங்கள் பகுதி காவல் நிலையத்தின் எண்கள்

நெல்லை மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த <