News December 30, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த யோசுவா (21), சாலமோன் (20) இருவரும் நேற்று இரவு 2 பேரும் டூவீலரில் உவரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஊருக்கு திரும்பியபோது கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். எதிரே வந்த வேன் எதிர்பாரவிதாமாக பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 23, 2026
நெல்லை: Recharege செய்ய இனி Gpay, Phonepe தேவையில்லை!

நெல்லை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு, பிளான் வேலிடிட்டி மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 23, 2026
நெல்லை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

நெல்லை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News January 23, 2026
நெல்லை அருகே தலைகுப்புற கவிழ்ந்த லாரி

குமரியில் இருந்து வெள்ளரிக்காய் ஏற்றிகொண்டு லாரி ஒன்று நெல்லை நோக்கி வந்துள்ளது. ராதாபுரம் அருகே உள்ள காவல்கிணறு புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வெள்ளரிக்காய்கள் சிதறி லாரி பலத்த சேதம் அடைந்தது. காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


