News January 29, 2026

நெல்லை: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

Similar News

News January 30, 2026

நெல்லை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். நெல்லை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

நெல்லை: ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

image

வள்ளியூர் அருகே புதூரைச் சேர்ந்த அரவிந்தன்(28) ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அவரது நண்பர்களான டேவிட்(20), பொன்ராஜ்(25) ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை புதூரில் அரவிந்தன் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த டேவிட், பொன்ராஜ் ஆகியோர் அரவிந்தனை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News January 30, 2026

நெல்லை: கோயிலில் திருடிய நபருக்கு 3 ஆண்டு சிறை

image

நெல்லை உத்தம பாண்டியன்குளம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருடிய வழக்கில் நீதிமன்றத்தால் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகம்(48) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம், கோவிலில் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசங்கர குமாரி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!