News October 6, 2025
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்

திருநெல்வேலி சென்னை எக்மோர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 20 பெட்டிகளோடு இயக்கப்படும் நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் வழக்கமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும். இந்நிலையில் ரயில் வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் காலை 6.00 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.
Similar News
News October 6, 2025
நெல்லை: விவசாயியை தாக்கிய கரடி

நெல்லை, அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி மிக்கேல் என்பவரது மகன் ஆரோக்கியம் நேற்று இரவு இந்திரா காலணியில் இருந்து வீட்டிற்கு வரும்போது மலையடிவாரப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி தாக்கியதில் ஆரோக்கியம் காயம் அடைந்தார். கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News October 6, 2025
நெல்லை: வெங்காயம் விலை எகிறியது!

நெல்லையில் ஒரு வாரம் முன்பு வரை சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. கடந்த வாரம் சில இடங்களில் ரூ.100க்கு 5 கிலோ பல்லாரி, சின்ன வெங்காயம் என கூவி அழைத்து விற்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போது முதல் ரக சின்ன வெங்காயம் இன்று ரூ.60 முதல் 70 ரூபாயை கடந்து விட்டது. அதே நேரம் தரம் குறைந்த சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்கப்படுகிறது.
News October 6, 2025
நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <