News January 17, 2026

நெல்லை: சாலை விபத்தில் கொத்தனார் பலி

image

நெல்லையை அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(59). கொத்தனாரான இவர் கல்லூரில் இருந்து சுத்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தார், அப்போது எதிர்பாரதவிதமாக நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

நெல்லை: பட்டா வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க!

image

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News January 25, 2026

நெல்லை: ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

நெல்லை மாநகரப் பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் அமீர் சுகைல் (24), ரத்தினபாலன் (38), திண்டுக்கல், பள்ளபட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது (26), முஸ்ஸமில் முர்சித் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து 5 பேரை சிறையில் அடைத்தனர்

News January 25, 2026

நெல்லை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!