News March 25, 2025
நெல்லை சரக டிஐஜி அதிரடி இடமாற்றம்

நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை காவல் சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி ராமநாதபுரம் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
நெல்லை: பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு

மானூர் கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கடந்த 8-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் வைத்து கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் செயினை பறித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து முத்துலட்சுமி ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
News November 14, 2025
நெல்லையில் தேசிய புத்தக கண்காட்சி

நெல்லை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் 40வது தேசிய புத்தக கண்காட்சி நாளை (நவ.14) மாலை 5 மணிக்கு எஸ்.என் ஹை ரோடு நயினார் காம்ப்ளக்ஸ் அருகில் வைத்து நடைபெற உள்ளது. நிவேதிதா கல்விக் குழுமம் முத்துக்குமாரசாமி புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். புத்தகக் கண்காட்சி நவ.14 முதல் 30 வரை நடைபெறுகிறது.
News November 14, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.


