News September 20, 2025
நெல்லை சந்திப்பில் வாலிபர் மர்ம மரணம்

நெல்லை சந்திப்பு ரயில்வே நிலையம் செல்லும் பாதையில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 20, 2025
நெல்லை: ஆட்டோவை திருடி சென்ற நபர் சுற்றி வளைப்பு

வண்ணாரப்பேட்டை பரணி நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் நேற்றிரவு நெல்லை டவுன் ஸ்ரீ புரத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று உள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது ஆட்டோவை ஒருவர் எடுத்து செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக தனது நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளார். வண்ணார்பேட்டையில் வைத்து அவரது நண்பர்கள் ஆட்டோவை மடக்கி பிடித்து ஆட்டோவை திருடி சென்ற நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News September 20, 2025
நெல்லை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News September 20, 2025
நெல்லை: காவல்துறையில் 3,665 காலியிடங்கள்.! APPLY

நெல்லை மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் <