News August 8, 2025

நெல்லை: கூகுள் மேப் மூலம் வந்தவர்களுக்கு அபராதம்

image

பாளையங்கோட்டையில் முதலாம் ஆண்டு பயிலும் மூன்று கிராமப்புற மாணவர்கள், நெல்லை சந்திப்பில் புத்தக கடைக்கு செல்ல கூகுள் மேப் உதவியுடன் பயணித்தனர். ஆனால், வழிதவறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். டிக்கெட் இல்லாததால், ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி, தலா 150 ரூபாய் அபராதம் விதித்தனர். கூகுள் மேப்பை நம்பாமல், விசாரித்து செல்ல அறிவுறுத்தி, மாணவர்களை அனுப்பினர்.

Similar News

News August 8, 2025

BREAKING: நெல்லை வாலிபர் கொலை – 4 குற்றவாளிகள் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் (27) என்பவரை வேலைக்கு அழைத்து சென்ற கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபுதாஸ் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், போலீசார் கொலை செய்த 4 குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News August 8, 2025

நெல்லை மக்களே இதை SAVE பண்ணிக்கோங்க!

image

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் ? அவர்களை தொடர்பு கொள்ளும் எண்கள் . மாவட்ட ஆட்சியர் – சுகுமார் – 0462-2501035
காவல்துறை கண்காணிப்பாளர் – சிலம்பரசன் – 0462-2568020
மாநகராட்சி ஆணையர் – சுகபுத்ரா – 0462-2329329
மாவட்ட வருவாய் அலுவலர் – சுகன்யா – 0462-2500466
ஊரகவளர்ச்சிதுறை இணை இயக்குநர் – சரவணன் – 0462-2500611
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News August 8, 2025

11ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், “நடப்பு ஆண்டில் 2ஆம் சுற்று குடற்புழு நீக்க முகாம் 11ஆம் தேதி மற்றும் விடுபட்டவர்களுக்கு 18ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு தடுப்பு மாத்திரை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!