News December 1, 2025

நெல்லை: குளத்தில் பெண் சடலம் மீட்பு

image

பாளையங்கோட்டை அடுத்த மேலப்பாக்கம் பகுதியில் பச்சேரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இன்று அடையாளத்தை தெரியாத பெண் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் தீயணைப்புத் துறை அங்கு சென்று அந்த பெண் சடலத்தை மீட்டனர். உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

நெல்லை: 5 உர விற்பனை நிலையங்களுக்கு தடை

image

வேளாண்மை அதிகாரிகள் களக்காடு வட்டாரத்தில் உர விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உர கட்டுப்பாட்டு ஆணை விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். பதிவேடு சரியாக பராமரிப்புக்காமல் இருத்தல், உரிய பாரம் இணைக்காமல் உரம் விற்பனை செய்தல் போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டன என இணை இயக்குனர் பூவண்ணன் தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

11.82 லட்சம் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று வரை, 14,17,655 வாக்காளர்களுக்கு (சுமார் 99.96 சதவீதம்) படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 11,82,927 கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்காத வாக்காளர்கள் விரைவில் வழங்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!