News January 27, 2026

நெல்லை காவல் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்

image

கீழப்பாட்டம் கிருபா நகர் பகுதி பொதுமக்கள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வருகை தந்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தனர்.

Similar News

News January 29, 2026

நெல்லை மக்களே, இந்த எண்கள் முக்கியம்! SAVE பண்ணுங்க..

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 29, 2026

நெல்லை: பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (60). இவர் தனியார் பல் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். டவுன் பகுதி சாலையில் நடந்து சென்ற போது பைக் மோதி படுகாயமடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

FLASH நெல்லை தொகுதி வேட்பாளர்; நயினார் சூசகம்!

image

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பேசிய அவர், நெல்லையில் (2001 – 2021) 5 முறை போட்டியிட்டதாகவும், நெல்லைக்கும், எனக்குமான உறவை பிரிக்க முடியாது என கூறினார். அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கிடாத நிலையில், நெல்லையில் போட்டியிடுவது குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து?

error: Content is protected !!