News September 22, 2025
நெல்லை காவலர் தின விழாவில் எஸ்பி பங்கேற்பு

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளியூர் உட்கோட்ட காவலர் குடும்பங்கள் கொண்டாடும் காவலர் தின விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதில் டிஎஸ்பி வெங்கடேஷ்,
பணகுடி காவல் ஆய்வாளர் ராஜாராம் உள்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News November 11, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்
News November 10, 2025
நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்படுவதற்கான தீர்மானம் இன்றும் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். குறிப்பாக அதிமுக சார்பில் மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு முடிவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
நெல்லை போலீஸ் தேர்வில் 691 பேர் ஆப்சென்ட்

நெல்லையில் போலீஸ் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் அனுமதிக்கபட்ட 4905 பேரில் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 4214 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்காதவர்கள் 691 பேர் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.


