News December 23, 2025
நெல்லை: காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை முயற்சி!

களக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (28). இவரும் திமுக நிர்வாகியான செல்வகருணாநிதி மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 2 பேரும் பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக காரில் வந்த செல்வகருணாநிதி, முத்துச்செல்வன் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
நெல்லை: கோர விபத்தில் பலி., சிதறிய உடல்!

நாங்குநேரியை பகுதியில் நெல்லை நான்கு வழிச்சாலையில் நேற்று முன் தினம் இரவு, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஆண் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அவரது உடல் மீது ஏறி சென்றதால் உருக்குலைந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து வந்த நாங்குநேரி போலீஸார் அவரது உடல் பாகங்களை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
நெல்லை: செல்போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே <
News December 31, 2025
நெல்லை: எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தில் 15 காலியிடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்திற்கு சத்துணவு பணியாளர்கள் காலம் முறை தொகுப்பூதியத்தில் பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 15 இடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 14ஆம் தேதி விண்ணப்பத்திற்கு கடைசி நாளாக உள்ளது.


