News April 22, 2025
நெல்லை – காச்சிகுடா ரயில் சேவை நீட்டிப்பு

கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு நெல்லை வழியாக இயக்கப்படும் காச்சிகுடா – நாகர்கோவில் சிறப்பு ரயில் வண்டி எண் (07435/ 36) ஜூன் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
ஊர் திரும்பிய பதக்க நாயகிக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை நாரணமாள்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த எட்வினா என்ற வீராங்கனை பக்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். ஓட்டப்பந்தயம் மற்றும் மெட்லி ரிலே ஆகிய பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் ஊர் திரும்பிய எட்வினாகுக்கு தெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
News October 30, 2025
நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News October 30, 2025
நெல்லை: சினிமாவை மிஞ்சும் நூதன கொள்ளை

பேட்டை MGP பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காதர் பீவி என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் மகளிர் உதவித்தொகைக்கு கணக்கெடுப்பு நடப்பதாக கூறி விஏஓ அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கே கழுத்தில் உள்ள செயினை கழற்றி தன்னிடம் தந்துவிட்டு விசாரணைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி காதர் பீவி செய்துள்ளார். பின்னர் அந்த பெண் செயினுடன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில் பேட்டை போலீசார் விசாரணை.


