News June 4, 2024
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி சான்றிதழ் வழங்கல்

நெல்லை நாடாளுமன்ற திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மொத்தமாக 5,02 ,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது .தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விட 1, 65, 620 வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றிபெற்றதை அடுத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார்.
Similar News
News July 7, 2025
குதிரையில் மிடுக்காக பரிவேட்டைக்கு சென்ற சுப்ரமணிய சுவாமி

நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி நடராஜர் பச்சை சாத்திய கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மதியம் சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டை சென்றார். இதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு கழித்தனர்.
News July 7, 2025
நெல்லை: ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்த வாலிபர்

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே மேல பாலாமடையைச் சேர்ந்த ஆறுமுக கனி (33), டிரைவரான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனில் சிக்கினார். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.07) அதிகாலை உயிரிழந்தார்.
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>