News January 8, 2025
நெல்லை: கலைத் திருவிழா போட்டியில் 83 மாணவர்கள் சாதனை

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவ மாணவிகள் மாநில பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 14 போட்டிகளில் முதலிடம் 7 போட்டிகளில் இரண்டாம் இடம், 9 போட்டிகளில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
Similar News
News February 10, 2026
நெல்லையில் அரசு ஊழியர்கள் 153 பேர் திடீர் கைது

நெல்லையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 09 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாவட்டத் தலைவர் சுப்பு தலைமையில் இன்று வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் கீழ்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 153 நபர்கள் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
News February 10, 2026
நெல்லை: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 10, 2026
திருநெல்வேலி விபத்தில் தாய், மகன் பலி

வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி கலாவதி(57) மகன் சுடலையாண்டி (34) இருவரும் மாடசாமி என்பவரின் ஆட்டோவில் நேற்று மாலை காவல்கிணறு நாகர்கோவில் சாலையில் பயணித்தனர். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஆட்டோ மீது மோதியது. இதில் கலாவதி, சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


