News October 20, 2025
நெல்லை: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

நெல்லை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 20, 2025
நெல்லை: தீபாவளி பண்டிகை சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கபட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைகள், கவனிப்பு அளிப்பதற்கு ஏதுவாக 20 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் உள்ளிட்ட நவீன உயிர் காக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
நெல்லை: திருச்செந்தூர் ரயில் 2 நாள் பகுதி தூரம் ரத்து

நெல்லை ரயில் நிலைய யார்டில் இந்த வாரம் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் அக்டோபர் 22, 23ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சியோடு நிறுத்தப்படும். மறு மார்க்கமாக அதே நாளில் அந்த ரயில் வாஞ்சி மணவாசியில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
நெல்லை: தீபாவளி மகிழ்ச்சி தொடரும் எண்கள் இதோ!

நெல்லை மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலைய எண்கள் திருநெல்வேலி (0462-2330101), பேட்டை (2342003), அம்பை (04634-250399), சேரன்மகாதேவி (260569), கங்கைகொண்டான் (04622-486500) மற்ற பகுதிகளின் எண்களுக்கு இங்கு <