News October 17, 2025
நெல்லை: கனமழையால் இடிந்து விழுந்த வீடு

நெல்லை டவுன் சுந்தரர் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா, பரமேஸ்வரன் என 2 மனநிலை பாதிக்கப்பட்ட மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இவருடைய வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
பார்வையற்ற மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி சேர்க்கை

பேட்டை அரசின் தொழில் பயிற்சி பள்ளி(ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சி பள்ளியில் பல தரப்பினரும் பயின்று வரும் நிலையில் மாற்றுத்திறன் மாணவர்களின் நலனுக்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் பயில்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்ற வருகிறது. வருகிற 30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
News October 18, 2025
ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடி – காவல்துறை

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டு இருக்கும் செய்தி தொகுப்பு தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வருவதாகவும், அப்படி நடைபெறும் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடிகள் நடைபெறுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பட்டாசு வாங்கும் போது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News October 18, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.17] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.