News March 16, 2025

நெல்லை: கடன் தொல்லை தீர்க்கும் ஆலயம்

image

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் புருஷோத்தம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் ஒரு தாயாருடன் காட்சி தருவதால் ‘புருஷோத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ‘ஏகபத்தினி விரதர்’ என்றும் பெயருண்டு. மூலவர் புருஷோத்தம பெருமாள் கைகளில் 2 சங்கு 2 சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். கடன் தொல்லை உள்ளவர்கள் இப்பெருமாளை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 21, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 20, 2025

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

image

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் கட்டுமானப்பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 வரை வழங்கப்படுகிறது. ITI படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-21, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்

News April 20, 2025

நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளான டானிக் பாட்டில்கள் போன்றவை பொதுக் கழிவுகளுடன் சேர்ந்து எரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து நேற்று மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் குப்பைகளை முறையாக கையாள வேண்டும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.

error: Content is protected !!