News November 7, 2025

நெல்லை: கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – எஸ்.பி

image

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ் பி சிலம்பரசன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை சகஜமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இத்தகைய செயல்களை தடுப்பதற்கு முதலில் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 14, 2026

திருநெல்வேலி: அரசு மருத்துவமனை குறித்து புகார் அளிக்க..!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? திருநெல்வேலி தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News February 14, 2026

திருநெல்வேலி: பைக் விபத்தில் சிறுவன் பலி

image

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம், கலைக்கோயில் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்(13) தனது சகோதரியின் பூப்புனித நீராட்டு விழாவைத் தொடர்ந்து நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சா்வேஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருநெல்வேலி அருகே சிவந்திப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2026

திருநெல்வேலி: 3 வயது குழந்தை பலி

image

திருநெல்வேலி கட்டாரங்குளத்தை சேர்ந்த பிரின்ஸ்(37) மற்றும் அவரது மனைவி, 3 வயது மகன் ரவினுடன் தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அந்தோணியார் சர்ச்(பிப்12) திருவிழாவிற்காக வந்தார். ஊர் திரும்ப தற்காலிக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, அப்போது பின்நோக்கி வந்த சிறப்பு பஸ்ஸின் சக்கரம் ஏறி எதிர்பாராமல் ரவின் உயிரிழந்தார். புளியம்பட்டி போலீசார் டிரைவர் முத்துவேலை(பிப்.13) கைது செய்தனர்.

error: Content is protected !!