News April 26, 2025

நெல்லை: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருநெல்வேலி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு குறைகளை புகார் அளிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 26, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News April 26, 2025

நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!

News April 26, 2025

அப்பு விளை ஊராட்சி ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் 2023 அக்டோபரில் உயிரிழந்ததை அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உடனடியாக தெரிவிக்காமல் கால தாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊராட்சி செயலர் சுமிலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

error: Content is protected !!