News December 5, 2024
நெல்லை எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் காணப்படும் அதிக கூட்டத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே 3 பொது பெட்டியுடன் இயங்கி வரும் நெல்லை & பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு முன்பதிவற்ற பொதுப்பெட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 22 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 21, 2025
நெல்லை: ரசிகர்களை சந்தித்த பைசன் பட குழுவினர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்காக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது .நெல்லை உடையார்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று பிற்பகல் காட்சியின் போது பைசன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் நேரடியாக தோன்றி ரசிகர்களை சந்தித்தனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடினர்.
News October 21, 2025
நெல்லை: நாளை மறுநாள் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

தென்னக ரயில்வே அறிவிப்பில், நெல்லை – சென்னை எழும்பூர் இடையே வரும் 22ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்; தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக அறிவிப்பு நெல்லை – சென்னை இடையே வரும் 22, 23 ஆம் தேதிகளில் இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்கம். நெல்லையிலிருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னைக்கு காலை 10.55 சென்றடையும்.
News October 21, 2025
அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து

தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக நெல்லை, செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு -நெல்லையிடையே வருகிற 24 மற்றும் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இந்த ரயிலுக்கு போதிய முன்பதிவு நடைபெறாததால் இந்த இரு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.