News January 24, 2026
நெல்லை: இளம்பெண் தற்கொலை!

களக்காடு அருகே கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த செல்வின் துரை – கஸ்தூரி (22) தம்பதியினர். கடந்த 19ம் தேதி கஸ்தூரிக்கும் அவரது மாமியாருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 27, 2026
நெல்லை: பட்டப்பகலில் 3 வீடுகளில் திருட்டு

பாளையங்கோட்டை அருகே கிருபாநகரை சேர்ந்த மனோரஞ்சிதம் என்பவர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.70,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.7000, மற்றொருவர் வீட்டில் ரூ.15000, 6 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.
News January 26, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News January 26, 2026
நெல்லை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

நெல்லை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க


