News December 27, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 1, 2026
நெல்லை: போதையில் தாத்தாவை தாக்கிய பேரன்!

நெல்லையை சேர்ந்த சங்கர் (67) தனது மகன் பாலாஜியுடன் வசித்து வருகிறார். இவரது பேரன் தினேஷ் (24) மது குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்து சங்கரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சங்கர் புகாரின் அடிப்படையில் நெல்லை நகரம் போலீஸார் தினேஷை கைது செய்தனர்.
News January 1, 2026
நெல்லை மக்களே., இனி பத்திரப்பதிவு சுலபம்!

நெல்லை மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை CLICK செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
நெல்லை: இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக் (22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.


