News March 29, 2025
நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.28] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிகுமார் ஆவுடையப்பன் ஆகியோர் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 15, 2025
நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
நெல்லை: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

நெல்லை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஏப்ரல்.1 முதல் ஏப்ரல் 30 வரை “வாடிக்கையாளர் சேவை மாதம்” எனும் நிகழ்வை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் சங்கரன்கோயில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 17.4.2025 அன்றுநடைபெறும். புதிய FTTH இணைப்பு சிம் கார்டுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என கூறியுள்ளார்.*ஷேர்
News April 15, 2025
நெல்லை: தவறவிட்ட குழந்தையை உரிமை கோர 30 நாட்கள் கெடு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் விலக்கு பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி ஜெசிக்கா பாதுகாப்பற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தைக்கு உரிமை கோர விரும்புவோர் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் அணுக வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.