News March 17, 2025
நெல்லை: இரவுநேர ரோந்துபணி காவல் அதிகாரிகளின் விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச்-16] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி (SJHR) துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
மனைவியை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற கணவர்

அம்பாசமுத்திரத்தில் செல்லையா(31) தனது மனைவி காவேரியை(28) தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, போலீசில் சரணடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட காவேரியுடன் குடும்ப தகராறு இருந்ததாக தெரிகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவேரியின் உடலை தேடி வருகின்றனர். வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டு, நாளை மீண்டும் தொடரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 25, 2025
நெல்லை: 2,240 கிராம செவிலியர் பணியிடங்கள்

நெல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதாவில் கவர்னர் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களைச் சரிசெய்து, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துள்ளதால் 2,240 கிராம சுகாதார செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.