News October 31, 2025
நெல்லை: இன்றைக்குள் இதை செய்தால் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2025 – 26 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை இன்று அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும் வரி விதிப்புதாரர்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவிகிதம் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே இன்றைக்குள் முடியும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News October 31, 2025
பாரதியார் பிறந்தநாள் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பே.ரா.விடுத்துள்ள செய்தி குறிப்பு: பொதிகை தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரதியார் பிறந்தநாள் கவிதை போட்டிகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கவிதைகளை 36 வரிகளுக்குள் எழுதி வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் pothigaitamilsangam@gmail.com என்ற இணையதளத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
News October 31, 2025
நெல்லை: நவம்பர் மாதம் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 65 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறத. நவம்பர் மாதத்திற்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி வருகிற 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும். இதை தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு : நெல்லை மாவட்டத்தில் ஆயிரம் பெற்றேன் பரப்பளவில் மக்காச்சோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கன் படைப்புழு பூச்சி தாக்கம் இருப்பதால் மகசூல் இழப்பீடு அதிகமாக இருக்கும். எனவே இதை தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆழமாக நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவின் போது வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும் என தெரிவித்துள்ளார்.


