News September 19, 2025
நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 11, 2025
கங்கை கொண்டான் ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் – கைலாசபுரம் இடையேயான 7-வது ரயில்வே கேட், தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்காக இன்று (நவ.11) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்படுகிறது. பொதுமக்கள் மாற்று வழியைப பயன்படுத்தும்படி நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
News November 11, 2025
நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி மகள் உடல் நல குறைவால் கடந்த ஆண்டு அம்பையில் உயிரிழந்தார். இதனால் தீராத சோகத்தில் ஒராண்டாக வசித்து வந்த அமுதவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 11, 2025
நெல்லையில் இருவர் மீது குண்டாஸ்

தச்சநல்லூரை சேர்ந்த முத்துகுமார் மகன் ஹரிஹரன்(25) மற்றும் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (35) ஆகியோர் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தனர். எனவே இருவரும் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மற்றும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


