News September 15, 2025
நெல்லை: ஆட்டோ டிரைவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை

கீழ வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் 6ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனது ஆட்டோவில் பள்ளியில் விடுவதாக அழைத்து சென்று ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்த தகவலின் படி பெற்றோர் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ மற்றும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
நெல்லை: எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள்

மதுரை விமான நிலையம் குறித்து இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பேசியதாக சொல்லபடுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறோம் என தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
News September 15, 2025
காவல் நிலையத்தில் திருட்டு: இருவர் கைது

பணகுடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் டயர்கள் திருடுபோனது தெரியவந்தது. விசாரணையில் வேல்முருகன், ராகுல் மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வேல்முருகன், ராகுல் இருவரையும் நேற்று கைது செய்தனர். ஜெகதீஷை தேடி வருகின்றனர்.
News September 15, 2025
நெல்லை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <