News April 16, 2024

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது பார்வையாளர் முன்னிலையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News February 17, 2026

திருநெல்வேலி: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

பாளையை சேர்ந்தவர் ஜோஸ்பின் சாலமன்(29). பாளை தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு எடுத்து வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் முதல்வர் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் ஜோஸ்பின் சாலமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News February 17, 2026

திருநெல்வேலி மாவட்ட தாசில்தார்கள்

image

நெல்லை மக்களே, உங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க தாசில்தார் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

▶️திசையன்விளை- 9384094224

▶️சேரன்மகாதேவி- 9384094223

▶️மானூா்- 9384094222

▶️இராதாபுரம்- 9445000674

▶️நாங்குநேரி- 9445000673

▶️அம்பாசமுத்திரம்- 9445000672

▶️பாளையங்கோட்டை- 9445000669

▶️திருநெல்வேலி- 9445000671

(அலுவக நேரத்தில் மட்டும் அழைக்கவும்)

*ஷேர் பண்ணுங்க

News February 17, 2026

நெல்லை மாணவி – தமிழ்நாட்டின் சிறந்த பெண் குழந்தை விருது

image

மாநிலத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருதினை நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் மாணவி சூடாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த மாநில பெண் குழந்தை விருதினை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவி சூடாமணிக்கு இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!