News December 21, 2025
நெல்லை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை அருகே கரையிருப்பை சேர்ந்தவர் தங்க கணபதி (50). இவரும் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் (50) என்பவரும் நேற்றிரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் ஏற்பட்ட தகராறில் மூக்கன், தங்க கணபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்க கணபதியின் சகோதரர் குமரேசன், மூக்கனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 21, 2025
பாம்பு கடித்த தூய்மை பணியாளருக்கு தீவிர சிகிச்சை

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடையினை தூய்மை பணியாளர்கள் இன்று துப்புரவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கடித்த நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News December 21, 2025
நெல்லை: உங்க ஓட்டு விவரத்தை உடனே தெரிஞ்சுக்கோங்க!

நெல்லை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
நெல்லை: 12th தகுதி., ரூ.1,05,000 சம்பளத்தில் அரசு வேலை!

நெல்லை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <


